மன்மத லீலை டிரெய்லர்!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானது. மாநாடு படம் முடிவதற்கு தாமதமான இடைப்பட்ட காலத்தில் அசோக் செல்வன் நடிப்பில் ‘மன்மத லீலை’ படத்தை இயக்கி முடித்துள்ளார் வெங்கட் பிரபு.
இந்தப் படத்துக்கு வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் கதையை எழுதியுள்ளார். வெங்கட் பிரபுவின் 10ஆவது படமாக உருவாகியுள்ள ’மன்மத லீலை’ வரும் ஏப்ரல் 1ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி மன்மத லீலை என்ன மாதிரியான படம் என்கிற விவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது டிரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு.
டிரெய்லரின் ஆரம்பத்தில் ‘மாட்டிக்கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே” - ’இப்படிக்கு மாட்டிக்கொண்டவர்’ என்று போடும்போதே இது ‘வேற மாதிரியான படம் என்பதை உணர்த்தி எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார்கள்.
'உன்னைப் பார்க்கும்போது என் ஃபியூச்சர் ஞாபகம் வருது. இன்னும் ரெண்டு பெக் போட்டா செத்துப்போன உன் ஆயா எல்லாம் ஞாபகம் வருவாங்க' என்று காதலியுடனும் மனைவியுடனும் காம உணர்வுகளுடன் வழிந்துகொண்டே ரொமாண்டிக் ப்ளஸ் காமெடியில் கலகலப்பூட்டும் வகையில் அசோக் செல்வனே டிரெய்லர் முழுக்க ஆக்கிரமித்திருக்கிறார்.
Here is our #manmadhaleelaiTrailer let’s spread love!! Have fun!! https://t.co/iNyzPWIn03 #aVPquickie #manmadhaleelai
— venkat prabhu (@vpoffl) March 21, 2022
படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அதற்கேற்றார்போல் ரொமாண்டிக் காட்சிகள் பார்வையாளர்களின் மனநிலையை உரசிப் பார்ப்பதுடன் படத்தில் என்னதான் இருக்கிறது எனப் பார்ப்போமே என்கிற தூண்டுதலை ஏற்படுத்தும் டிரெய்லராக மன்மத லீலை முன்னோட்டம் இருக்கிறது.
குடும்பங்களுடன் பார்க்ககூடிய படம் இல்லை என்பதை படத்தின் விளம்பர சுவரொட்டிகளும், டிரெய்லரும் அக்மார்க் முத்திரையுடன் உறுதிப்படுத்துகிறது.
அம்பலவாணன்