மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 மா 2022

யுவன் இசையில் கதாநாயகனாகும் புகழ்

யுவன் இசையில் கதாநாயகனாகும் புகழ்

'குக் வித் கோமாளி' புகழ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் புகழ் இந்த வார இறுதி எபிசோடுகளில் எண்ட்ரி கொடுத்தார். இதில் முதன் முறையாக , தான் கதாநாயகனாக நடிக்கும் படம் குறித்தான போஸ்டரையும் அறிமுகப்படுத்தியது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி அங்கிருந்த போட்டியாளர்களுக்குமே சர்ப்ரைஸ்.

'கலக்க போவது யாரு?' நிகழ்ச்சியின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் புகழ். பின்பு இவர் கோமாளியாக கலந்து கொண்ட விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியும், அதில் புகழின் காமெடியும் அவருக்கு இன்னும் அதிகமான கவனத்தை பெற்று தந்தது.

'குக் வித் கோமாளி' யின் இரண்டாவது சீசனில் இவர் கலந்து கொண்டபோதே ஏராளமான பட வாய்ப்புகள் வந்தது. கதாநாயகனின் நண்பனாக, காமெடியனாக இவர் நடித்த 'வலிமை', 'என்ன சொல்ல போகிறாய்', 'எதற்கும் துணிந்தவன்', 'சபாபதி' ஆகிய படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சந்தானம், அஜித், சூர்யா என குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்தது பலரின் கவனத்தையும் பெற்றது. இப்பொழுது 'குக் வித் கோமாளி' மூன்றாவது சீசன் ஆரம்பித்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், சர்ப்ரைஸ்ஸாக தான் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் படத்திற்கான போஸ்டரையும் முதன் முறையாக 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் வெளியிட்டு இருக்கிறார் புகழ்.

'Mr. Zoo Keeper' என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புகழ் இதை ரிவீல் செய்ததும் அங்கிருந்த போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகத்தில் கத்தி, புகழுக்கு வாழ்த்து சொன்னார்கள்.

படத்தின் ஷூட்டிங் நேற்று ஊட்டியில் ஆரம்பித்திருக்கும் நிலையில், இதன் கதாநாயகியாக 'டிக்கிலோனா' புகழ் ஷிரின் கன்ச்வாலா நடிக்கிறார். ஜெ. சுரேஷ் படத்தை இயக்குகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக பிலிப்பைன்ஸ் செல்கிறது படக்குழு.

நிகழ்ச்சியில் சொன்னதோடு, தன்னுடைய சமூக வலைதள பக்கங்களிலும் இந்த செய்தியை பகிர்ந்த புகழ், 'என் உயர்வுக்கு ஏணியாக இருந்து உதவும் என் உயிர் ரசிகர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

செஃப் வெங்கடேஷ் பட், "யுவன் இசையமைக்கிறார் என்றால் நிச்சயம் அது உன்னுடைய அடுத்த கட்ட வளர்ச்சி. கதையும் நிச்சயம் நன்றாக வரும்" என வாழ்த்து கூறினார்.

மேலும், இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து பின்னணி பாடகர் அந்தோணி தாசன் வெளியேற்ற பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிரா

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

திங்கள் 21 மா 2022