e‘இரவின் நிழல்’ முதல் பார்வை வெளியீடு!

entertainment

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.
நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஒத்த செருப்பு சைஸ் 7 வெளியாகி, விமர்சன ரீதியில் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்தது. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து நடித்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தை பார்த்திபனே இயக்கி, தயாரித்து இருந்தார். பார்த்திபனின் இந்த முயற்சிக்கு ’ஸ்பெஷல் ஜூரி’ தேசிய விருது, ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஆடியோகிராபிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
தற்போது இரவின் நிழல் படத்தை இயக்கி வருகிறார் பார்த்திபன். இந்தப் படம், ஆசியாவிலேயே முதன்முதலாக ஒரே ஷாட்டில் படமாக்கப்படுவதாக பார்த்திபன் அறிவித்திருந்தார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. போஸ்டரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, பார்த்திபன் தனது முகநூல் பக்கத்தில், “First look…Design design ஆக செய்து பார்த்தும், ஒரே Poster-ல் எப்படி எல்லாம் விளக்குவது? அகில இந்திய நட்சத்திரங்கள் இருந்தும், ஒரு போர்வாளை மட்டுமே போட்டு அகிலத்தையே மிரட்ட நானென்ன மணிரத்தினம் சாரா? அவர் 1st look-ஐ வெளியிடுவதே Special, நன்றி. ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்தும், ஆஸ்கார் விருது இரண்டு பெற்றும், இன்னும் 30 வருடங்களுக்கான இசை உச்சம் நிலைக்க உழைக்கும் இறை+நிறை கலைஞன் ஏ.ஆர்.ஆர் அவர்களின் கருத்து இந்தப் படத்தைப் பற்றி போதுமான அளவு சொல்லுமென நம்புகிறேன்” என்றுக் கூறி படம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் பேசும் வீடியோவையும் இணைத்துள்ளார். போஸ்டரில் காளி கையில் சூலங்களோடு துப்பாக்கியும் வைத்திருக்க, அவருக்கு கீழே பயத்துடன் பார்த்திபன் அமர்ந்திருக்கிறார். அதேபோல, புதரான இடத்தில் பார்த்திபன் டார்ச் லைட் அடித்துக்கொண்டிருக்கும் இரண்டு போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளது படக்குழு.
**இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *