மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 19 மா 2022

என் இதயத்துக்கு நெருக்கமான 7: தோனி

என் இதயத்துக்கு நெருக்கமான 7: தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கும் தோனி அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜெர்சி எண் 7-ஐ தான் தேர்தெடுத்ததற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதற்காக சென்னை அணி வீரர்கள் கேப்டன் தோனி தலைமையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சச்சினின் ஜெர்சி எண் 10 என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. அதையடுத்து அதிகம் பேசப்பட்ட ஜெர்சி எண் எதுவெனில் அது தோனியின் ஜெர்சி எண் 7 தான்.

இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தோனி, “ஆரம்பத்தில் எல்லோரும் 7 என்பது என் அதிர்ஷ்டம் என்று நினைத்தார்கள். ஆனால் நான் அந்த எண்ணை தேர்தெடுத்ததற்கான காரணம் சாதாரணம் தான். நான் ஜூலை மாதம் 7ஆம் தேதியில் பிறந்தேன், எனவே அந்த நாள் ஏழாவது மாதம் ஏழாம் தேதியில் வருகிறது. இந்த காரணத்திற்காகவே நான் என் ஜெர்சி எண்ணை 7 என வைத்துக்கொண்டேன். நான் எண்கள் குறித்த மூடநம்பிக்கை கொண்டவன் அல்ல, ஆனால் எண் 7 என்பது என் இதயத்துக்கு நெருக்கமான எண்” என்று கூறியிருக்கிறார்.

உடற்தகுதி பற்றிக் கூறிய தோனி, “உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க மந்திரம் ஏதும் இல்லை. கடின உழைப்பும் பயிற்சியும்தான் அதற்கு காரணம். என் பள்ளி நாட்களில் இருந்ததுபோல் இன்றில்லை. இன்றைய மாணவர்கள் டிஜிட்டல் உலகத்தில் உள்ளனர். உடல் உழைப்பு இல்லாமல் இணையதளங்களில் விளையாட்டுகளை விளையாடுகிறார்கள்” என்றும் கூறியுள்ளார்.

-ராஜ்

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சனி 19 மா 2022