மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 19 மா 2022

போரை நிறுத்துங்கள்: ஹாலிவுட் நடிகர் வேண்டுகோள்!

போரை நிறுத்துங்கள்: ஹாலிவுட் நடிகர் வேண்டுகோள்!

ஆங்கில திரைப்படங்களில் ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து போராடும், அமெரிக்க உளவாளியாக நடித்தவர் அர்னால்ட். அவர் தற்போது உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ரஷ்ய அதிபருக்கும், வீரர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ இது சட்ட விரோதமான போர். உலகமே கண்டிக்கும் இந்த போரில் உங்கள்(ரஷ்ய) ராணுவ வீரர்களின் வாழ்க்கை, உங்கள் எதிர்காலத்தினை தியாகம் செய்கிறீர்கள். கிரெம்ளின் மாளிகையில் ஆட்சியில் உள்ளவர்களை கேட்கிறேன். உங்கள் சொந்த இலக்குக்காக ஏன் இளம் வீரர்களை தியாகம் செய்கிறீர்கள். ரஷ்ய வீரர்களே, 1 கோடியே 10 லட்சம் ரஷ்யர்களின் சொந்தங்கள் உக்ரைனில் உள்ளனர். நீங்கள் சுடும் ஒவ்வொரு தோட்டாவும் உங்கள் சகோதர சகோதரிகளை சுடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் . ரஷ்யாதான் இந்தப் போரைத் தொடங்கியது. இது ரஷ்ய மக்களின் போர் அல்ல. இந்தப் போரைத் நீங்கள்தான் தொடங்கினீர்கள். நீங்கள் தான் இந்தப் போரை முன் எடுத்து செல்கிறீர்கள். நீங்கள் நினைத்தால் இந்தப் போரை உங்களால் நிறுத்த முடியும்” என்று பேசியிருக்கிறார்.

இராமானுஜம்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

சனி 19 மா 2022