மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 19 மா 2022

'பீஸ்ட்' இரண்டாவது பாடல்: வெளியான ஜாலி புரோமோ!

'பீஸ்ட்' இரண்டாவது பாடல்: வெளியான ஜாலி புரோமோ!

'பீஸ்ட்' படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' வெற்றி படங்களுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் நடிகர் விஜய்யை வைத்து முதன் முறையாக இயக்கும் திரைப்படம் 'பீஸ்ட்'. இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க செல்வராகவன், ரெடின் கிங்க்ஸ்லே உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

படம் அடுத்த மாதம் 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் இருக்கிறது. ஆனால், இன்னும் தேதி குறித்து சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் படத்தின் புரோமோஷன் தொடங்கி விட்டது. கடந்த மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு 'அரபிக்குத்து' பாடல் வெளியாகி, இப்போது வரையுமே இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. கிட்டத்தட்ட 100 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் கடந்து யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது 'அரபிக்குத்து' பாடல்.

இந்த நிலையில், இப்போது 'பீஸ்ட்' படத்தில் இருந்து இரண்டாவது பாடலான 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் புரோமோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தது. இன்று மாலை 6 மணிக்கு பாடல் வெளியாக இருக்கிறது.

இதில் நெல்சன் ஜானி மாஸ்டருடன் நடனத்திற்கு ரெடியா என கேட்க, தன்னுடைய டீமை ஆடிக்காட்ட சொல்லி இதுதான் இந்த பாட்டுக்கான நடனம் என்கிறார் ஜானி மாஸ்டர். அதை பார்த்து விட்டு, 'ஆர்ட்டிஸ்ட் யாருன்னு தெரியலையா? ஸ்டெப்ஸ் எல்லாம் பயங்கரமா இருக்கே?' என சுற்றியுள்ள ரெடின் மற்றும் கேங்கை காட்ட அவர்கள் ஸ்டைலில் ஒரு நடனம் ஆட, நெல்சன் அவர்களை அங்கிருந்து விரட்டுவது போல இந்த புரோமோ செம ஃபன்னாக அமைந்திருக்கிறது.

'அரபிக்குத்து' ட்ரெண்டாக இருக்கும் நிலையில், ஜாலியோ ஜிம்கானா பாடலும் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆதிரா

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

சனி 19 மா 2022