மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 19 மா 2022

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. அப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்தைத் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். செப்டம்பர் 26,2021 அன்று இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்தை ‘தளபதி 66’ என அழைத்து வருகின்றனர்.

அந்தப் படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று (மார்ச் 18) இரவு 7.30 மணியளவில் விஜய்யின் 66 ஆவது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்று அறிவித்திருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதை அறிவித்திருக்கிறார்.

அஜித்தின் 62 ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான அரைமணி நேரத்தில் விஜய் 66 பட நாயகி பற்றிய அறிவிப்பு வெளியானதால் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் அவற்றை வேகவேகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இராமானுஜம்

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

சனி 19 மா 2022