மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 மா 2022

வக்கீல் மீது நடிகை புகார்!

வக்கீல் மீது நடிகை புகார்!

மலையாளத்தில் முன்னணி நடிகை பாவனா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.

இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் மீது எர்ணாகுளம் தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீஸ் அதிகாரிகளை கொல்ல நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியதாகப் புதிய வழக்கும் தொடரப்பட்டது.

இந்த நிலையில், திலீப்பின் வழக்கறிஞர் ராமன் பிள்ளைக்கு எதிராக நடிகை பாவனா எர்ணாகுளம் பார் கவுன்சிலில் புகார் கொடுத்துள்ளார்.

அதில் அவர், “வழக்கறிஞர் ராமன் பிள்ளை நான் கடத்தப்பட்ட வழக்கில் பல சாட்சிகளை கலைத்துள்ளார். விசாரணையின் தொடக்க கட்டத்தில் எனக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த பலர் பல்டி அடித்ததற்கு ராமன் பிள்ளையின் தலையீடுதான் காரணமாகும். அவரும், அவரது உதவியாளர்களும் பல சாட்சிகளைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர்.

பணம் வாங்காதவர்களை மிரட்டியும் உள்ளனர். சாட்சிகளை எதிர் தரப்பு வழக்கறிஞர் எந்த காரணம் கொண்டும் சந்திக்கக் கூடாது. ஆனால், அதை மீறி ராமன் பிள்ளை இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார். மேலும், நடிகர் திலீப் செல்போனில் இருந்த விவரங்களை அழிப்பதற்கும் அவரது உதவி வழக்கறிஞர்கள் உதவி செய்துள்ளனர். இவை வழக்கறிஞர் தொழில் சட்டத்துக்கும், நேர்மைக்கும் எதிரானதாகும். எனவே, திலீப் வழக்கறிஞர் ராமன் பிள்ளை மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-இராமானுஜம்

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

வெள்ளி 18 மா 2022