மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 மா 2022

மாநாடு: அடுத்தடுத்த படங்களை தயாரிக்கும் சுரேஷ் காமாட்சி

மாநாடு: அடுத்தடுத்த படங்களை தயாரிக்கும் சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் சம்பந்தமான பிரச்சினைக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் சுரேஷ்கமாட்சி.

மறைந்த இயக்குநர் மணிவண்ணன் உதவியாளராக திரையுலகில் வாழ்க்கையை தொடங்கியவர், அமைதிப்படை-2, கங்காரு, மிகமிக அவசரம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இவை எதுவும் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை. சிலம்பரசன் நடிக்கும் படம் தயாரித்தாலே சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டும் என்கிற நிலையில் அவர் கதாநாயகனாக நடித்த மாநாடு படத்தை பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு சமாளித்து தயாரித்து வெளியிட்டார். படத்தின் வெற்றி சுரேஷ்கமாட்சி மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான வி.ஹவுஸ் புரடெக்க்ஷன்ஸ் நிறுவனத்திற்கு கௌரவத்தையும், தனித்த அடையாளத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளது.

இதனால் முதல் பிரதி அடிப்படையில் படங்களை தயாரித்து கொடுக்க வலைதள நிறுவனங்கள் சுரேஷ் காமாட்சியை அணுக தொடங்கியுள்ளன.

மாநாடு படத்தைத் தொடர்ந்து தற்போது சுரேஷ் காமாட்சி ஐந்து படங்களைத் தயாரிக்கிறார். அவற்றில் முதல்படமாக ராம் இயக்கத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இரண்டாவது படமாக வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ஜீவி-2 படம் அறிவிக்கப்பட்டு அதன் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை தயாரிக்கவுள்ளனர்.

மிஷ்கின் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராணாடகுபதி கதாநாயகனாக நடிக்கும் படமொன்றின் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

-இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வியாழன் 17 மா 2022