மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 மா 2022

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பிரேம்ஜி

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பிரேம்ஜி

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் பிரேம்ஜி வில்லனாக நடிக்க இருக்கிறார்.

இயக்குநர் நெல்சனுடன் 'டாக்டர்' பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து 'டான்' திரைப்படம் வரும் மே மாதம் வெளியாக இருக்கிறது. அவரது 20வது திரைப்படம் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நேரடியாக நடிக்கும் முதல் தெலுங்கு படம் இது. ஏற்கனவே, 'டாக்டர்' திரைப்படம் தெலுங்கில் வெளியான போது நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனை அடுத்து தனது 20ஆவது படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கில் களம் இறங்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரிக்கிறது.

சமீபத்தில் இந்த படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. நடிகர் சத்யராஜ், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இன்னொரு கதாநாயகியை ஹாலிவுட்டில் இருந்து அறிமுக படுத்த இருக்கிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

மேலும் முதன் முறையாக சிவகார்த்திகேயனுடன் ப்ரேம்ஜி இணைந்து நடிக்க இருக்கிறார். அதிலும் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் என்கிற ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது. கதாநாயகன், பாடகர், இசையமைப்பாளர், காமெடி நடிகர் என ப்ரேம்ஜியை இதுவரை திரையில் பார்த்தவர்களுக்கு வில்லன் அவதாரம் என்ற செய்தி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. காரைக்குடியில் நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஆதிரா

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

வியாழன் 17 மா 2022