மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 மா 2022

விஜய்சேதுபதி படத்தை வெளியிடும் ஆர்.கே.சுரேஷ்

விஜய்சேதுபதி படத்தை வெளியிடும் ஆர்.கே.சுரேஷ்

நடிகர் விஜய்சேதுபதியின் 'மாமனிதன்' படத்தின் திரைப்பட வெளியீட்டு உரிமையை ஆர்.கே.சுரேஷ் கைப்பற்றி இருக்கிறார்.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய்சேதுபதி- சீனு ராமசாமி நான்காவது முறையாக இணையும் படம் இது. இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா இருவரும் இணைந்து முதல் முறையாக இசையமைத்திருக்கிறார்கள்.

மேலும் இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜாவே தயாரித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் முடிந்து சில வருடங்கள் கடந்த நிலையில் நிதி பிரச்சனைகள் காரணமாக படம் வெளிவராமல் இருந்தது.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் கேரள தியேட்டர் வெளியீட்டு உரிமையை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்.கே. சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம் கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து, 'மாமனிதன்' திரைப்படம் வரும் மே மாதம் திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

இதற்கு முன்பே, சீனு ராமசாமி- விஜய் சேதுபதி இயக்கத்தில் வெளியான 'தர்மதுரை' படத்தை ஆர்.கே. சுரேஷ் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிரா

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

வியாழன் 17 மா 2022