மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 மா 2022

அமெரிக்காவில் 1150 திரைகளில் ஆர்ஆர்ஆர்

அமெரிக்காவில் 1150 திரைகளில் ஆர்ஆர்ஆர்

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், சமுத்திரகனி மற்றும் பலர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் அடுத்த வாரம் மார்ச் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

கொரோனா காரணமாக ராதே ஷ்யாம், ஆர் ஆர்ஆர் என இரண்டு படங்களும் வெளியீட்டுத் தேதியை பலமுறை மாற்றினார்கள். ராதேஷ்யாம் மார்ச் 11 அன்று வெளியாகிவிட்டது. இரண்டு வாரங்கள் கழித்து ஆர்ஆர்ஆர் வெளிவர உள்ளது. தெலுங்கில் பிரதானமாக தயாரானாலும் இதனை ஒரு சர்வதேச படமாக புரமோட் செய்வதில் தயாரிப்பு தரப்பில் எவ்வித சோர்வும் இன்றி பணியாற்றுகின்றனர்.

அதற்கு இயக்குநரும், கதாநாயகர்களும் முழுமையான ஒத்துழைப்பு தருகின்றனர். அதனால்தான் ஆர்ஆர்ஆர் இப்போதும் எதிர்பார்ப்புக்குரிய படமாக ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் அமெரிக்காவில் 1150 இடங்களில் வெளியாக உள்ளதாக படத்தை அங்கு வெளியிடும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“மிகப் பெரிய ஆக்க்ஷன் டிராமா படத்தின் மிகப் பெரிய வெளியீடு. உறுதி செய்யப்பட்ட 1150 இடங்களில், அமெரிக்காவில் இதுவரை கேள்விப்படாத அளவுக்கு அதிகமான காட்சிகள்” என்று தெரிவித்துள்ளார்கள் படக்குழுவினர். ஒரு நாள் முன்னதாக மார்ச் 24ம் தேதியே அங்கு பிரிமீயர் காட்சிகளும் நடைபெற உள்ளது. அதற்கான முன்பதிவுகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

-இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

புதன் 16 மா 2022