மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 மா 2022

‘குற்றபரம்பரை’யை இயக்கும் சசிகுமார்

‘குற்றபரம்பரை’யை இயக்கும் சசிகுமார்

இயக்குநர் சசிகுமார் சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமாகி 12 வருடங்கள் ஆகிறது. அவரை நடிகராக மட்டுமே இன்றைய தலைமுறைக்கு தெரியும். அந்தளவுக்கு நிறையப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

2010 டிசம்பரில் வெளியான ஈசன், அவர் இயக்கிய இரண்டாவது படம். அதன்பிறகு முழுநேர நடிகராகிவிட்டார். பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குவதற்கு தயாராகியுள்ளார். தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட கதை குற்றப்பரம்பரை. இக்கதையை பாரதிராஜா, பாலா ஆகியோர் படமாக்கப் போவதாகச் சொன்னார்கள். அதனால் பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டது.

அறிவிக்கப்பட்ட வேகத்திலேயே பாரதிராஜா, பாலா இருவரும் அந்த முயற்சியை கைவிட்டார்கள். திரைப்பட துறையில் விரிவடைந்து வரும் வியாபார எல்லை, மாற்றங்கள் காரணமாக முதலீட்டிற்கும் அதனை திரும்ப எடுப்பதற்குமான தளமாக வலைத்தளங்கள் இருப்பதால், இப்போது குற்றப்பரம்பரை கதையை இணையத் தொடராக எடுக்கவிருக்கிறார்கள். அதைத் தயாரிப்பவர் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். அதை இயக்குபவர் சசிகுமார். இத்தொடரில் சத்யராஜ்,தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாம்.

சசிகுமார் நடித்து வெளியான சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன், பலேவெள்ளையத்தேவா படம் இயக்கிய சோலைபிரகாஷ், ஆகியோர் சசிக்குமாருடன் இணைந்து பணிபுரியவுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றனர் சினிமா வட்டாரத்தில்.

இராமானுஜம்

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

புதன் 16 மா 2022