மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 மா 2022

‘மாமன்னன்’ படப்பிடிப்பில் வடிவேலு

‘மாமன்னன்’ படப்பிடிப்பில் வடிவேலு

நடிகர் வடிவேலு இயக்குநர் மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' பட வெற்றிகளுக்கு பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் தனது மூன்றாவது படம் குறித்தான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். 'மாமன்னன்' என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வழங்குகிறது. நடிகர் வடிவேலுவின் பெயரை முதன்மையாக கொண்டு போஸ்டர் வெளியானது. இதில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஃஹத் பாசில் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் பட தலைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு, பூஜையுடன் படப்பிடிப்பும் துவங்கியது. வடிவேலுவுடன் உதயநிதி, மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதன் முறையாக நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வடிவேலுவை இயக்குவது குறித்து மாரி செல்வராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வடிவேலுவுடனான புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். அதில் அவர், 'நிறைவேறிய தொடர் கனவு! மாமன்னனில் வைகைப்புயல்' என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அதே போல, இந்த படத்தில் முதன் முறையாக மாரி செல்வராஜ் ஏ.ஆர். ரஹ்மானுடன் பணியாற்ற உள்ளார். இதற்கு முன்பு மாரி செல்வராஜின் 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய படங்களுக்கு சந்தோஷ் நாராயணனே இசையமைத்தார். இதனால் மாரி செல்வராஜ் -ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி என்பது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

சேலம் பகுதிகளை சுற்றி நடக்கும் இந்த கதையின் படப்பிடிப்பில் தற்போது நடிகர் வடிவேலுவும் இணைந்துள்ளார். வடிவேலு, லுங்கி சட்டையுடன் படத்திற்கான கெட்டப்பில் இருக்க அவருக்கு மாலை அணிவித்து இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினர் வரவேற்றுள்ள புகைப்படங்களை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இன்னொரு பக்கம், லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் மைசூர் பேலஸ்ஸில் முடித்து விட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளது படக்குழு. மூன்றாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிரா

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

செவ்வாய் 15 மா 2022