மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 மா 2022

எதற்கும் துணிந்தவன் - சூரியின் ட்வீட்

எதற்கும் துணிந்தவன் - சூரியின் ட்வீட்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், வினய்,சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி, சூரி, தேவதர்ஷிணி, இளவரசு ஆகியோர் நடித்திருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். இந்த படம் நேற்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது.

கடலூரில் இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி பாமக சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. மேலும் தியேட்டர் உரிமையாளர்கள் இந்த படத்தை வெளியிடக் கூடாது என பாமக சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது. குறிப்பாக வன்னிய மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காதவரை அவரது படத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என பாமக சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

எதற்கும் துணிந்தவன் படம் திரைக்கு வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 8 ஆம் தேதி முதல் நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம்(10.3.2022) காலை முதல் தமிழ்நாடு முழுவதும் சுமார் 550 தியேட்டர்களில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. அசம்பாவிதம் நடக்காமலிருக்க, முதலில் எதிர்ப்பு கிளம்பிய கடலூர் மாவட்டத்தில் உள்ள 17 தியேட்டர்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. இதேபோன்று நாமக்கல் மாவட்டத்தில் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் 12 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. ஆனால், ரசிகர்களின் வருகை இல்லாததால் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. முதல் காட்சி காலை 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. ஆனாலும் ரசிகர்களின் கூட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது. படம் பார்க்க வந்த ரசிகர்களின் கூட்டத்தை விட போலீசாரின் கூட்டமே அதிகளவில் காணப்பட்டது என்றார் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திரையரங்க உரிமையாளர் ஒருவர்.

பாமக மற்றும் வன்னிய அமைப்புகள் எதற்கும் துணிந்தவன் படம் திரையிட்ட திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்துவார்கள், அசம்பாவிதங்கள் நடக்கலாம் என கருதி இவர்கள் அதிகமாக இருக்கும் 17 மாவட்டங்களில், படம் பார்க்க சூர்யா ரசிகர்களை தவிர மற்ற தரப்பினர் தியேட்டர் பக்கம் வரவில்லை. தென் தமிழகத்தில் இந்தப் பிரச்சினை இல்லை.

படத்தின் வசூல் கள நிலவரம் இப்படி இருக்க காமெடி நடிகர் சூரி

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு, மக்கள் மத்தியில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியதாக கூறியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு கீழே சூரி, இன்றைய காலச்சூழலுக்கு, மிகவும் தேவையான கருத்துள்ள, தாய்மார்கள் கொண்டாடும் படத்தை தந்தமைக்கு அண்ணன் பாண்டிராஜிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

‘ஆம்பள பிள்ளைகள் அழகூடாதுன்னு மட்டும் சொல்லி வளர்த்தவுக , இனி பொம்பள பிள்ளைகள அழ வைக்க கூடாதுன்னு சொல்லி வளர்ப்பாங்க’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக ஒரு படத்தின் உண்மையான வசூலை தமிழ் படங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக அறிவிப்பதில்லை. அதேநேரம் படம் வெளியான மூன்றாவது நாள் "சக்ஸஸ் மீட்" என பத்திரிகையாளர்களை சந்திப்பது வாடிக்கை .அப்போது மொத்த வசூல் என்ன ஆனது என்று கேட்டால் அதை நாம் தனியாக பேசலாமே என மழுப்பலாக பதில் கூறி விடுவார்கள். ஒரு படத்தின் வெற்றி தோல்வியை முழுமையாக கணிப்பதற்கு குறைந்தபட்சம் இருவாரங்கள் தேவைப்படும். ஆனால் முதல் நாளே படம் வெற்றி என்கிற பிம்பத்தை சூரி கட்டமைக்க முயற்சித்திருப்பதை நெட்டிசன்கள் காமெடியாக விமர்சித்து வருகின்றனர்.

அம்பலவாணன்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

சனி 12 மா 2022