மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 மா 2022

நடிகர் விஜய்க்கு வில்லனாகும் விவேக் ஓபராய்

நடிகர் விஜய்க்கு வில்லனாகும் விவேக் ஓபராய்

நடிகர் விஜய்யின் 66 வது படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது.

'டாக்டர்' பட வெற்றிக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் என பலரும் நடித்திருக்கும் படம் ‘பீஸ்ட்’. படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் வேளையில், அடுத்த மாதம் திரைப்படம் திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

காதலர் தினத்தை முன்னிட்டு படத்தில் இருந்து வெளியான ‘அரபிக்குத்து’ பாடலும் ரசிகர்களிடையே இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

இந்த நிலையில், ‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் 66வது படம் தெலுங்கு- தமிழ் என இருமொழிகளில் உருவாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் வம்சி இயக்குகிறார். தில் ராஜூ தயாரிக்கும் இந்த படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. நடிகர் விஜய் முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தானா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே, ‘பீஸ்ட்’ படத்தில் பூஜா ஹெக்டேவா அல்லது ராஷ்மிகாவா என கதாநாயகி தேர்வில் இவர்களது பெயர்கள் அடிபட்ட போது இறுதியாக பூஜா தேர்வானார். 'பீஸ்ட்' படத்தில் விட்ட வாய்ப்பை ‘தளபதி66’ல் ராஷ்மிகா நடிக்க உள்ளதன் மூலம் பிடித்துள்ளார் ராஷ்மிகா. தற்போது பாலிவுட் படத்தில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா சமீபத்தில் 'அரபிக்குத்து' பாடலுக்கு நடனமாடியது வைரலானது.

நடிகர் விஜய்யின் ஆரம்ப காலக்கட்ட கதைகள் தேர்வு போல குடும்பங்களுக்கு பிடித்த வகையிலான கதையாக ‘தளபதி66’ இருக்கும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தனது முந்தைய பேட்டிகளில் தெரிவித்தார். மேலும் கதைப்படி நடிகர் விஜய்க்கு வலிமையான வில்லன் தேவைப்படுவதால் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர் ஏற்கனவே தமிழில் நடிகர் அஜித்தின் ‘விவேகம்’ படம் மூலமாக வில்லனாக கோலிவுட்டில் அறிமுகமானார். அந்த வகையில் ‘தளபதி66’ படத்திலும் இவர் நடிப்பது உறுதியாகி விட்டால் தமிழில் விவேக் ஓபராய்க்கு இது இரண்டாவது படம் ஆகும்.

இந்த செய்தி வெளியானதில் இருந்து தல- தளபதிக்கு அடுத்தடுத்து வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விவேக் ஓபராய்க்கு கிடைத்துள்ளது என ரசிகர்கள் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஆதிரா.

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

சனி 12 மா 2022