மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 மா 2022

மனைவியுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

மனைவியுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கார் விருது வென்றபின் சர்வதேச அளவில் பிரபலமானார். சமூக வலைத்தளங்களில் சினிமா, பொது விஷயங்கள் சம்பந்தமாக கருத்து தெரிவிக்கும் ரஹ்மான் சில நேரங்களில் தன் மகன், மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவது உண்டு. ஆனால் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டது இல்லை.

இன்று தன்னுடைய 27வது திருமண நாளை முன்னிட்டு மனைவி சாய்ரா பானுவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஒன்றாக இருப்பது ஒரு கலை…எல்லாப் புகழும் இறைவனுக்கே,” என்று பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு ரசிகர்கள் பலரும் மணநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த புகைப்படம் மூன்று லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர்.

அம்பலவாணன்

லெஜண்ட் சரவணாவால் குழப்பமான சூர்யா ரசிகர்கள்!

3 நிமிட வாசிப்பு

லெஜண்ட் சரவணாவால் குழப்பமான சூர்யா ரசிகர்கள்!

தெலங்கானா முதல்வரைச் சந்தித்த விஜய்

2 நிமிட வாசிப்பு

தெலங்கானா முதல்வரைச் சந்தித்த விஜய்

இரண்டாவது திருமணம் குறித்து டி.இமான்

4 நிமிட வாசிப்பு

இரண்டாவது திருமணம் குறித்து டி.இமான்

சனி 12 மா 2022