மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 மா 2022

சென்னை மேயருடன் நயன்தாரா

சென்னை மேயருடன் நயன்தாரா

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில் நூற்றாண்டுகள் பழமையானது. வெளி உலகில் பிரபலமாகாத இந்தக் கோயில் ரஜினிகாந்த் நடித்து தயாரித்த பாபா படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த கோயிலில் வேண்டிக்கொள்வது அப்படியே நடக்கும் என்பது ஆன்மீக பக்தர்களின் நம்பிக்கை.

இந்த கோயிலில் புதிதாக பொறுப்பு ஏற்றிருக்கும் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் நேற்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டன. அந்த சமயத்தில் நடிகை நயன்தாரா மற்றும் அவரின் காதலரும் இயக்குநருமான விக்‌னேஷ் சிவன் ஆகியோரும் அந்த கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்திருந்தனர்.

சாமி தரிசனம் முடிந்தவுடன் கோயிலில் இருந்த சென்னை மாநகர மேயர் பிரியா ராஜனை சந்தித்து நடிகை நயன்தாரா வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் தற்போது ஏற்றுள்ள பதவியில் சிறந்து விளங்கி மற்றவர்களுக்கு ரோல்மாடலாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் அங்கிருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் நயன்தாரா என்கின்றனர் அவரது வட்டாரத்தில்

இராமானுஜம்

தியேட்டர் பாணியில் ஓடிடி!

5 நிமிட வாசிப்பு

தியேட்டர் பாணியில் ஓடிடி!

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

3 நிமிட வாசிப்பு

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான  ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

3 நிமிட வாசிப்பு

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

சனி 12 மா 2022