மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 மா 2022

ரீமேக் படத்தில் அஜித்

ரீமேக் படத்தில் அஜித்

வலிமை படத்துக்கு அடுத்து அஜித்குமார் நடிக்கும் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். அந்தப் படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.

வலிமை படத்தின் திரைக்கதை பற்றி கடுமையான விமர்சனங்கள் வெளியானது. ‘ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக இருந்தாலும் கொஞ்சமாவது திரைக்கதை இருக்க வேண்டாமா? அப்படி சொதப்பிய வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித்குமார் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார்?’ என்கிற கேள்விகள் இயக்குநர்கள் மத்தியில் விவாத பொருளாகி வருகிறது .

அஜித்குமார் அடுத்து நடிக்கும் ஏகே 61 எனக் கூறப்படும் படத்துக்காக ஹெச்.வினோத் சொன்ன கதைகள் எதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் வேற்றுமொழியில் ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற படத்தின் உரிமையை வாங்கி தமிழில் எடுக்கலாம் என முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் ஹாலிவுட் நடிகர் அல்பசினோ, அஜித்குமாருக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றும் அவருடைய படங்களை மிகவும் விரும்பிப் பார்ப்பார் என்பதால் அவர் நாயகனாக நடித்து 1975ஆம் ஆண்டு வெளியான டாக் டே ஆஃப்டர்நூன் (Dog day Afternoon) படத்தின் ரீமேக் உரிமையை சட்டபூர்வமாக வாங்குவது எனவும் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது

வங்கிக்கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை தமிழுக்கு ஏற்ப திரைக்கதையில் மாற்றங்களைச் செய்யலாம். இதனால் திரைக்கதைக்கான மெனக்கெடல் இருக்காது என்பதுடன், ஆங்கிலப்பட தழுவல் என்கிறபோது ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்பதால் அஜித்குமார் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏனென்றால் அஜித்குமார் நடித்த பில்லா-2 படம் நடிகர் அல்பசினோ நடிப்பில் வெளியான

ஸ்கேர்ஃபேஸ் படத்தின் காப்பி என்பது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வியாழன் 10 மா 2022