ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை!


தமிழ் நடிகைகளில் கதாநாயகி பிம்பத்திற்குள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளாமல் கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் கருதி படங்களை தேர்வு செய்து நடிப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நகைச்சுவை, சண்டை காட்சிகள் நிறைந்த பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகியாக தற்போது நடிக்கவுள்ளார்.
இந்த புதிய படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது.
ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெயின்மெண்ட் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து 'புரொடக்க்ஷன் நம்பர் 1' என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கின்றன.
இதனை லாக்கப் திரைப்படத்தின் இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன் நடிகை லட்சுமி பிரியா, நடிகர்கள் சுனில் ரெட்டி, கருணாகரன், மைம் கோபி, தீபா ஷங்கர், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
பாலமுருகன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறார் இயக்குநர் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளை வென்றிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் புதிய பட அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-இராமானுஜம், ஆதிரா