மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 மா 2022

சிம்பு வழக்கு: தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அபராதம்!

சிம்பு வழக்கு:  தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அபராதம்!

ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிலம்பரசன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், சிலம்பரசன் நாயகனாக நடித்து 2016-ல் வெளியான படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன். இந்தப் படத்தில் நடிக்க சிலம்பரசனுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1 கோடியே 51 லட்சம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. இதில் சம்பள பாக்கி 6 கோடியே 48 லட்சம் ரூபாயை பெற்றுத்தரக் கோரி நடிகர் சிலம்பரசன் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருத்திருந்தார்.

படம் வெளியாகி மோசமான தோல்வியை தழுவியதால் படத்தின் மூலம் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிலம்பரசனிடம் வாங்கித்தருமாறு அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், இணையதளங்களில் தனக்கு எதிராக, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாகக்கூறி, மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிலம்பரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில், தயாரிப்பாளர்கள்சங்கம், தென்னிந்தியநடிகர் சங்கம், அப்போதைய தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் நடிகர் விஷால் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார். இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 1,080 நாட்கள் ஆகியும், வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யாததால், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்ட நீதிபதி, இந்த தொகையை மார்ச் 31ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என கூறி ஏப்ரல் 1-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

-இராமானுஜம்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

புதன் 9 மா 2022