மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 மா 2022

நடிகைக்கு பாலியல் வன்முறை: மனம் திறந்த சூர்யா

நடிகைக்கு பாலியல் வன்முறை: மனம் திறந்த சூர்யா

நடிகர் சூர்யா மலையாள நடிகை மீதான பாலியல் அத்துமீறல் தொடர்பான விஷயத்தில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் நாளை மார்ச் 10ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகிறது. ‘சூரரைப்போற்று’, ‘ஜெய்பீம்’ திரைப்படங்களுக்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் புரோமோஷனுக்காக பெங்களூரு, ஆந்திரா, கேரளா என நடிகர் சூர்யா மற்றும் படக்குழு பயணம் செய்து ரசிகர்களையும், பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து வருகின்றனர். இந்த வகையில் நடிகர் சூர்யா, நடிகை பாவனாவுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் குறித்து மேடையில் மனம் திறந்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, “நியாயமற்ற இது போன்ற செயல் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. நவீனமாக நாம் மாறி வரும் சமயத்தில் இந்த மாதிரியான விஷயங்கள் நடந்து வருவது வருத்தத்திற்குரியது. இதை நினைக்கும் போது மனது வருத்தமடைகிறது” என்று பேசியுள்ளார்.

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படமும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள், வன்கொடுமைகளை எதிர்த்து பேசும் கதைக்களமாக இருக்கிறது என்பது படத்தின் ட்ரைய்லர்/ டீசர் பார்க்கும் போது தெரிகிறது.

நடிகை பாவனா, தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் அதில் இருந்து மீண்டு வந்தது குறித்தும் மற்ற பெண்களுக்காக போராடுவேன் எனவும் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிரா

லாபம் தருமா வெந்து தணிந்தது காடு’!

3 நிமிட வாசிப்பு

லாபம் தருமா வெந்து தணிந்தது காடு’!

சிறப்பு பார்வை: நெஞ்சுக்கு நீதி!

7 நிமிட வாசிப்பு

சிறப்பு பார்வை: நெஞ்சுக்கு நீதி!

கேன்ஸ் பட விழாவில் ரஞ்சித்தின் வேட்டுவம்!

2 நிமிட வாசிப்பு

கேன்ஸ் பட விழாவில் ரஞ்சித்தின் வேட்டுவம்!

புதன் 9 மா 2022