மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 மா 2022

‘அரபிக்குத்து' பாடலுக்கு விஜய் தந்த பாராட்டு!

‘அரபிக்குத்து' பாடலுக்கு விஜய் தந்த பாராட்டு!

'அரபிக்குத்து' பாடல் கேட்டுவிட்டு நடிகர் விஜய் தனக்கு பாராட்டு தெரிவித்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம் 'பீஸ்ட்'. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தில் இருந்து 'அரபிக்குத்து' என்ற பாடல் வெளியானது. பூஜா மற்றும் விஜய் இருவரும் நடனமாடியிருந்த இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். 'புட்ட பொம்மா', 'செல்லம்மா' பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் இதற்கும் நடனம் அமைத்திருந்தார். பாடல் 125 மில்லியன் பார்வைகளை கடந்து ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக நடிகர் விஜய்க்கு எழுதியுள்ள பாடல் இது. இந்த பாடல் குறித்து நடிகர் விஜய் என்ன சொன்னார் என்று சமீபத்தில் விருது விழா மேடை ஒன்றில் சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது அதற்கு அவர், “பல நாட்களுக்கு முன்பே இந்த பாடலை படமாக்கி விட்டார்கள். அப்போது விஜய் சார் என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது. ஏதோ புரியாமல் எழுதி இருக்கிறான் என நினைத்து என்னை அழைக்கவில்லை என நினைக்கிறேன். சமீபத்தில் தான் இதற்கான புரோமோ ஷூட் செய்தோம். அப்போது தான் அவர் எனக்கு கால் செய்து, 'சூப்பர்பா எழுதியதற்கு தேங்க்ஸ். அரபிக்லாம் சூப்பரா எழுதறியே” என்றார்.

அதுபோன்று, பாட்டு கேட்டதும் தனக்கு பிடித்ததாகவும் சூப்பர் ஹிட் ஆகி விடும் எனவும் அனிருத்திடம் விஜய் சார் சொல்லி இருக்கிறார் ' என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஆதிரா.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

செவ்வாய் 8 மா 2022