மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 மா 2022

ஐபிஎல் 2022: சென்னை அணி மோதும் ஆட்டங்கள் விவரம்!

ஐபிஎல் 2022: சென்னை அணி மோதும் ஆட்டங்கள் விவரம்!

15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

65 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 பிளேஆப் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. கடைசி லீக் ஆட்டம் மே 22ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

வான்கடே மைதானம் மற்றும் டி.ஒய்.பாட்டீல் ஆகிய மைதானங்களில் தலா 20 லீக் ஆட்டங்களும், மும்பை பிரபோன் மைதானம் மற்றும் புனே எம்சிஏ சர்வதேச ஸ்டேடியத்தில் தலா 15 போட்டிகளும் நடக்கின்றன. இரண்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில் முதல் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும்.

லீக் ஆட்டங்களுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. பிளேஆப் போட்டிகள் மற்றும் மே 29ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் மற்றும் மைதானங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

சென்னை அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் வரும் 31ஆம் தேதி லக்னோ அணியை எதிர்கொள்கிறது. ஏப்ரல் 3ஆம் தேதி மூன்றாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடனும், ஏப்ரல் 9ஆம் தேதி நான்காவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியுடனும் விளையாடுகிறது. ஏப்ரல் 12ஆம் தேதி சென்னை அணி தனது ஐந்தாவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

இதையடுத்து ஏப்ரல் 17ஆம் தேதி குஜராத்துடனும், ஏப்ரல் 21இல் மும்பையுடனும், ஏப்ரல் 25ஆம் தேதி பஞ்சாப் அணியுடனும், மே 1ஆம் தேதி ஹைதராபாத் அணியுடனும் மோதுகிறது.

மே 4ஆம் தேதி பெங்களூரு அணியுடனும், மே 8ஆம் தேதி டெல்லி அணியுடனும், மே 12ஆம் தேதி மும்பையுடனும், மே 15ஆம் தேதி குஜராத் அணியுடனும் சென்னை அணி மோதுகிறது. மே 20ஆம் தேதி சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

லீக் போட்டிகள் தொடர்பான முழுமையான அட்டவணையையும் இந்த லிங்க்கில் காணலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

-ராஜ்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

திங்கள் 7 மா 2022