மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 மா 2022

‘ராதே ஷியாம்’- பிரபாஸ்: பாகுபலிக்கு முன்பே கேட்ட கதை இது!

‘ராதே ஷியாம்’- பிரபாஸ்: பாகுபலிக்கு முன்பே கேட்ட கதை இது!

யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும், ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ‘ராதே ஷியாம்’. இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

இவ்விழாவில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதாகிருஷ்ண குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, பாடலாசிரியர் மதன் கார்கி தயாரிப்பாளர் பிரமோத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

‘ராதே ஷ்யாம்’ படத்தின் பாடலாசிரியர் மதன் கார்கி பேசுகையில், “மூன்று வருடங்களுக்கு முன்பு இயக்குநர் இந்த கதையை சொன்னார். முதல் பாதி கைரேகை பற்றி சொன்ன போது, எனக்கு தயக்கம் இருந்தது. ஆனால் இரண்டாம் பாதி கேட்கையில் இந்தக்கதை மனதிற்குள் புகுந்துகொண்டது. எப்போதும் காதலுக்கும் காலத்திற்கும் இடையில் ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. அதைதான் இயக்குநர் பிரமாண்டமாக திரையில் வரைந்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் பிரபாஸ் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தில் ஒரு காட்சியில் பூஜா மிக மிக சூப்பராக நடித்திருக்கிறார். அந்த காட்சியை எப்படி எழுதினார்கள் என வியப்பாக இருந்தது. ஜஸ்டின் மிக அழகான மெலடி பாடல்களை தந்துள்ளார். பிரபாஸ் ரொம்ப நாள் கழித்து ஆக்சனில் இருந்து ஒதுங்கி, நல்ல ரொமான்ஸ் படம் செய்துள்ளார்” என்றார்.

இவரை தொடர்ந்து பேசிய ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, “படிக்கும்போது மணிரத்னம் சாரும், பிசி சாரும் இல்லையெனில் நாம் கேமரா சாதனங்களுக்கு வெளிநாடுதான் போக வேண்டும் என பேசிக்கொள்வோம். அப்படி ஒரு அழகான விதத்தில் ராதாகிருஷ்ண குமார் இப்படத்தை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என சொல்லிவிட்டார். நிறைய முன்னேற்பாடுகள் செய்துதான் எடுத்திருக்கிறோம். விஷுவல் பார்த்துவிட்டு எல்லோரும் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். ஜெர்மனியில் பகலில் எடுக்க வேண்டிய காட்சியை எனக்காக நான் சொன்னேன் என, இரவில் எடுத்துள்ளோம். எனக்கு நிறைய சுதந்திரம் தந்தார்கள். இயக்குநரிடம் நிறைய கதைகள் இருக்கிறது. பூஜா 4 வருடத்தில் நிறைய வளர்ந்துவிட்டார். இந்த கதாப்பாத்திரத்தை மிக ஆழமாக புரிந்து செய்துள்ளார். ஜஸ்டின் லவ் ஸ்டோரிக்கு ஏற்ற மியூசிக் தந்துள்ளார். எல்லோரும் பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி” என்றார்.

அடுத்து தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி பேசுகையில், “ராதே ஷியாம் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள், ரெட் ஜெயண்ட் மூவீஸ் ரிலீஸ் பண்ண எப்ஐஆர் படத்தின் சக்சஸ் மீட்டிற்கே என்னால் வரமுடியவில்லை. என் படம் இன்று தான் ஆரம்பித்துள்ளது. கட் அடித்துவிட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் 2 மாதம் முன்னாடியே பார்த்தேன். அப்போது 3 1/4 மணி நேரம் ஓடியது. படம் ஒவ்வொரு காட்சியும் டிரெய்லர் மாதிரியே பிரமாதமாக இருந்தது. பிரபாஸ் உடைய ஃபேன் நான். பாகுபலிக்கு முன்னாடியே உங்களை பிடிக்கும். பூஜா இங்கு அரபிக்குத்து குத்தினார். இந்தப்படத்திலும் கலக்கியிருக்கிறார். சத்யராஜ் சார் ஒரு வித்தியாசமான ரோல் செய்துள்ளார். கடைசி காட்சியில் ஒரு அட்டகாசமான ஃபைட் இருக்கிறது. இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் பிரமாண்டமாக வெளியிடுகிறோம்” என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசியதாவது, “பிரபாஸை நாங்கள் டார்லிங் என சொல்வோம். பூஜா டார்லிங்கின் டார்லிங், கடவுள் நம்பிக்கை இல்லாமல் கைரேகை நிபுணராக நடித்திருக்கிறேன் என கேட்கிறார்கள். பெரியார் படத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன். ஜெர்ஸி படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்திருக்கிறேன் அப்படிதான் எடுத்து கொள்ள வேண்டும், நான் ஹீரோவாக நடிக்கும் போது 25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன், அதை என்ன சொல்வது. நடிப்பை நடிப்பாக மட்டும் எடுத்துகொள்ள வேண்டும். இந்தப்படம் மிக அழுத்தமான காதல் கதை, பிரபாஸ் பறந்து சண்டை போடுவார் என்றால், இதில் கப்பலே பறக்கிறது. இங்கு ஜேம்ஸ் கேமரூன் தான் வந்திருக்க வேண்டும். அவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது. பிரபாஸின் அழகுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது. ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கிறது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு முக்கியமான பொறுப்பு வந்துள்ளது. பான் இந்தியா என்று எல்லா ஸ்டேட்டிலிருந்து ஒரு நடிகரை போட்டு எடுக்கிறார்கள். ஆனால் இந்தப்படம் உண்மையில் பான் இண்டர்னேஷனல் படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

’ராதே ஷ்யாம்’ படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே பேசுகையில், “நாங்கள் கடந்த 5 வருடங்களாக உழைத்த உழைப்பு உங்களுக்காக உருவாக்கிய காதல் கதை உங்களிடம் வந்துள்ளது. இந்த கடின காலத்தை தாண்டி, இந்த படத்தை எடுத்து வந்துள்ளோம், பிரமோத் மிக பிரமாண்டமாக படத்தை உருவாக்கியிருக்கிறார், ராதே பாத்திரம் எனக்கு மிக சிறப்பானதொரு பாத்திரம். சத்யராஜ் சாருடன் காட்சி இல்லாதது வருத்தம், பிரபாஸ் மிகச்சிறப்பான ஒத்துழைப்பு தந்தார், மனோஜ் உடன் பீஸ்ட் படமும் செய்கிறேன். இந்தப்படத்தை மிக அழகாக எடுத்துள்ளார்” என்றார்.

நடிகர் பிரபாஸ் பேசுகையில், “சத்யராஜ் என் செல்ல கட்டப்பா, அவருடன் மிர்ச்சி படம் முதல் முறையாக பண்ணினேன்.அது சூப்பர் டூப்பர் ஹிட், அதன்பிறகு பாகுபலி. இப்போது இந்த படத்தில் ஒரு அருமையான பாத்திரம் செய்துள்ளார். இது அருமையான காதல் கதை. ஆக்சனும் இருக்கிறது. காதல் கதைக்கு மியூசிக் முக்கியம் ஜஸ்டின் அற்புதமான இசையை தந்துள்ளார். இந்த படத்தின் நாயகன் மனோஜ் சார் தான் என்னை அத்தனை அழகாக காட்டியுள்ளார். எல்லோரும் விஷுவலை பாராட்டுகிறார்கள் அவர்களுக்கு நன்றி. எல்லாம் மனோஜ் சாருக்கு தான். இந்தப்படத்தில் பூஜா மிக அழகாக இருக்கிறார் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியுள்ளது. பிரமோத் என்னை வச்சு லவ் ஸ்டோரி எடுத்திருக்கிறார். நிறைய தைரியம் இருக்கணும். இயக்குநர் பாகுபலிக்கு முன்பே இந்த கதையை சொன்னார். எப்படி என்னை காதல் கதையில் யோசித்தார் என தெரியவில்லை. 5 வருடம் நீண்ட பயணம் ராதே ஷ்யாம் மிக நல்ல படமாக இருக்கும்” என்றார்.

1970களில் ஐரோப்பாவில் நடக்கும் கதை. கைரேகை நிபுணராக வித்தியாசமான பாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருக்கிறார். அகில இந்திய பிரபல நடிகர் அமிதாப் பச்சன் குரல் கொடுத்திருக்கிறார். அதிநவீன விஷுவல் எஃபெக்ட்கள், இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் மார்ச் 11 அன்று திரைக்கு வரவுள்ளது.

ஆதிரா

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

சனி 5 மா 2022