மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 மா 2022

இன்று இலங்கை டெஸ்ட்: ரோஹித் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி!

இன்று இலங்கை டெஸ்ட்: ரோஹித் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி!

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இன்று (பிப்ரவரி 4) காலை 9.30 மணிக்கு மொகாலியில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அடுத்து இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்குப் பிறகு விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்திய அணி கடைசியாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்டில் விளையாடி (டிசம்பர்-ஜனவரி) 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. சொந்த மண்ணில் கடைசியாக நியூசிலாந்துடன் (நவம்பர்-டிசம்பர்) டெஸ்டில் விளையாடியது. இரண்டு போட்டி கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

இந்தியா - இலங்கை அணிகள் இடையே கடைசியாக 2017ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்தன. சொந்த மண்ணில் நடந்த மூன்று போட்டி கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பதவியில் இந்த டெஸ்ட் எப்படி சிறப்பு வாய்ந்ததோ அதேபோல் விராட் கோலிக்கும் இந்த டெஸ்ட் முக்கியத்துவம் வாய்ந்தது. கோலிக்கு இது 100ஆவது டெஸ்டாகும்.

டி20 தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்த இலங்கை அணி டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் இன்று மோதுவது 45ஆவது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 44 போட்டியில் இந்தியா 20இல், இலங்கை 7இல் வெற்றி பெற்றுள்ளன. 17 டெஸ்ட் டிரா ஆனது.

இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்ற ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

-ராஜ்

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

4 நிமிட வாசிப்பு

சிம்பு தான் வேணும்: ஸ்ரீநிதி

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

3 நிமிட வாசிப்பு

இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்?

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

வெள்ளி 4 மா 2022