மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 மா 2022

உதயநிதி நடிக்கும் பட டைட்டில்!

உதயநிதி நடிக்கும் பட டைட்டில்!

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்புகள் வெளியானது.

கர்ணன் படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் தற்போது தமிழில் `விக்ரம்’ படத்திலும், தெலுங்கில் `புஷ்பா 2’ படத்திலும் நடித்து வருகிறார்.

இவர்களுடன் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில், நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் உதயநிதிக்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்துக்கு, `மாமன்னன்' என்று பெயரிட்டுள்ளது படக்குழு. மாமன்னன் படம் குறித்து மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளபக்கத்தில் எனது மூன்றாவது படைப்பு இது. நன்றியும் அன்பும் ஏ.ஆர்.ரஹ்மான் சார், உதயநிதி ஸ்டாலின் சார் என்று குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பில் படம் தயாராகிறது.

சண்டை காட்சிகளை திலீப் சுப்ராயன் இயக்குகிறார். நடனத்தை மாஸ்டர் சாண்டி ஒருங்கிணைக்க, பாடல்கள் யுகபாரதியின் வரிகளில் வரவுள்ளன என்று படக்குழு தெரிவித்துள்ளது.

-இராமானுஜம்

பட வெளியீட்டில் ஆதிக்கம் செலுத்தும் ரெட் ஜெயண்ட்!

5 நிமிட வாசிப்பு

பட வெளியீட்டில் ஆதிக்கம் செலுத்தும் ரெட் ஜெயண்ட்!

மகனின் ‘நெஞ்சுக்கு நீதி’ பார்த்த மு.க.ஸ்டாலின்

1 நிமிட வாசிப்பு

மகனின் ‘நெஞ்சுக்கு நீதி’ பார்த்த மு.க.ஸ்டாலின்

பீஸ்ட் இறுதி காட்சி குறித்து விமர்சனம்!

3 நிமிட வாசிப்பு

பீஸ்ட்  இறுதி காட்சி குறித்து விமர்சனம்!

வெள்ளி 4 மா 2022