மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 மா 2022

சிம்புவின் 'கொரோனா குமார்' நாயகி யார்?

சிம்புவின் 'கொரோனா குமார்' நாயகி யார்?

நடிகர் சிம்பு நடிக்கும் 'கொரோனா குமார்' படத்தின் நாயகி யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் திரையரங்குகளில் நூறாவது நாளை இன்று கொண்டாடி கொண்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படம் தவிர்த்து 'சில்லுன்னு ஒரு காதல்' இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்துதல', கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலே சொன்ன இரண்டு படப்பிடிப்புகளையும் முடித்து விட்டு அடுத்து 'கொரோனா குமார்' படத்தில் இணைய இருக்கிறார் சிம்பு.

இந்த படத்தில்தான் ஷங்கர் மகள் அதிதி சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். ஏற்கனவே, அதிதி கார்த்தியுடன் 'விருமன்' படத்தில் நடித்துள்ளார்.

மேலும், 'கொரோனா குமார்' படத்தில் பஃஹத் பாசிலும் வில்லனாக நடிக்க உள்ளார். பஃஹத் பாசில் தமிழில் கமல்ஹாசனுடன் 'விக்ரம்', மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் புதிய படம் ஆகியவற்றில் இருக்கிறார். இந்நிலையில் அவர் சிம்புவுடனும் நடிக்க உள்ளார் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வெள்ளி 4 மா 2022