மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 மா 2022

‘செல்ஃபி’: எப்போது ரிலீஸ்?

‘செல்ஃபி’: எப்போது ரிலீஸ்?

ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்த ‘செல்ஃபி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு நேற்று அறிவித்தது.

தற்போது அதிக படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் ‘செல்ஃபி’.

இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில், பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். மேலும் இயக்குநர் கெளதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார். கல்லூரி மாணவர்களின் இட ஒதுக்கீடுக்கு பேரம் பேசும் தாதாவாக அவர் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷுடன் கெளதம் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறை. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

‘செல்ஃபி’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வி கிரியேஷன்ஸ் மற்றும் டிஜி ஃபிலிம் கம்பெனியின் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ள ‘செல்ஃபி’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், படத்தை ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட இருப்பதாக, படக்குழுவினர் அதிகாரபூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்

-இராமானுஜம்

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

வியாழன் 3 மா 2022