மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 மா 2022

மீண்டும் இணையும் ரஜினி - வடிவேலு

மீண்டும் இணையும் ரஜினி - வடிவேலு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த்- வடிவேலு கூட்டணி என்றாலே அனைவருக்கும் சந்திரமுகிதான் நினைவுக்கு வரும். வடிவேலுவுக்கு காமெடிக் காட்சிகளில் உடல் மொழியில் அவருக்கு இணையான போட்டி கொடுக்கக்கூடியவர் ரஜினிகாந்த், குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட சந்திரமுகி வீட்டிற்குள்ளேயே எடுக்கப்பட்ட படம். ரஜினிகாந்த் படங்களுக்கான பிரம்மாண்டம் இல்லாத சந்திரமுகி வெற்றிக்கு அதன் கதை மட்டுமல்ல வடிவேலு - ரஜினிகாந்த் ஜோடி நிகழ்த்திய காமெடியும் ஒரு காரணமாக இருந்தது.

இதேகூட்டணி மீண்டும் வாசு இயக்கத்தில் ‘குசேலன்’ படத்தில் இணைந்தது. திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் வடிவேலு தனித்து நிகழ்த்திய காமெடி காட்சிகள் திரையரங்குகளை அதிர வைத்தது. அதன்பிறகு, கடந்த 14 ஆண்டுகளாக ரஜினிகாந்த் - வடிவேலு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், நெல்சன் இயக்கும் ரஜினிகாந்த்தின் 169ஆவது படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

-அம்பலவாணன்

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

புதன் 2 மா 2022