மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 பிப் 2022

‘மாறன்’ டிரெய்லரை ரிலீஸ் செய்வது யார்?

‘மாறன்’ டிரெய்லரை ரிலீஸ் செய்வது யார்?

தனுஷ் நடித்துள்ள மாறன் படம் குறித்தான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் மாறன் படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, மகேந்திரன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்தப் படம் ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியிடப்படவுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வருகிற 28ஆம் தேதி படத்தின் டிரெய்லர் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதை யார் ரிலீஸ் செய்ய போகிறார் என்பது கண்டுபிடிக்க முடிகிறதா என்ற கேள்வியுடன் ஹாட் ஸ்டாரின் மீடியா பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த ரசிகர்கள், ஹாட் ஸ்டாரில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்புதான் தொகுத்து வழங்கவுள்ளார். அதனால், இந்தப் படத்தின் டிரெய்லரை சிம்புதான் ரிலீஸ் செய்வார் என்று கூறிவந்தனர்.

இந்த நிலையில், படத்தின் டிரெய்லரை யார் ரிலீஸ் செய்வார் என்பது குறித்த அறிவிப்பை ஹாட் ஸ்டார் வெளியிட்டுள்ளது. அதில், ரசிகர்களான நீங்கள்தான் மாறன் படத்தின் டிரெய்லரை ரிலீஸ் செய்ய போகிறீர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு படத்தின் டிரெய்லர் குறித்தான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

-வினிதா

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

ஞாயிறு 27 பிப் 2022