மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 பிப் 2022

குஜராத் சினிமாவில் நயன் - விக்னேஷ் சிவன்

குஜராத் சினிமாவில் நயன் - விக்னேஷ் சிவன்

மணிகண்டன் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று விஜய் சேதுபதி, யோகி பாபு, ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஆண்டவன் கட்டளை.

கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச் செழியன் தயாரித்த இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்தப் படம் குஜராத்தி மொழியில் தயாரிக்கப்பட உள்ளது.

இந்தப் படத்தின் மூலம் குஜராத்தி சினிமாவிலும் தயாரிப்பாளராக அறிமுகமாகிறது விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் முதன்முறையாக இதர மொழியில் படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் மல்ஹர் தக்கர், ரித்திகா சிங் கதாபாத்திரத்தில் மோனல் கஜ்ஜார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

நேற்று ( 26.02.2022) படபூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்தப் படத்தினை தேசிய விருது வென்ற இயக்குநர் மனீஷ் சைனி இயக்கி வருகிறார். இதற்கு ‘Shubh Yatra’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு.

இது தொடர்பான அறிவிப்பினை வழக்கம்போல தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

- இராமானுஜன்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

ஞாயிறு 27 பிப் 2022