ஆதிவாசி தலைவரின் வாழ்க்கையை படமாக்கும் பா.ரஞ்சித்

entertainment

பழங்குடியின தலைவரும், உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்கிற கோஷத்தை இந்தியாவில் முதன்முறையாக அறிவித்தவருமான பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க போவதாகவும், அப்படத்தை தானே இயக்கப்போவதாகவும் இயக்குநர் பா. ரஞ்சித் அறிவித்து இருந்தார். 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களிடமும் மற்றும் உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த, பழங்குடி மக்களுக்காகப் போராடியவர் ஜார்கண்ட் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு இறுதியில் துவங்கவுள்ளதாக தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் தலித் மக்களின் உரிமைகளை ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை திரைப்படமாக இயக்கியும், தயாரித்தும் வெற்றிபெற்று வருகிறார். இவர் இயக்கத்தில் வெளி வந்த அட்டக்கத்தி,மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை படங்கள்
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. அதேபோல், இவரது நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகியப் படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பில் நட்சத்திரம் நகர்கிறது படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார்.

இந்தப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், பா. ரஞ்சித் இந்தியில் இயக்குநராக அறிமுகமாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு இறுதியில் துவங்கவுள்ளதாக தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது. இந்தப்படத்தை நமா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

‘பிர்சா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க உள்ளது. இந்தப் படத்திற்காக பிர்சா வாழ்ந்தப் பகுதிகளில், படக்குழு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தகவல்களை சேகரித்து வருகிறது. பிர்சா பிறந்த நவம்பர் 15ஆம் தேதியை, பழங்குடியினர் திருநாளாக கொண்டாட இந்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அந்த தேதியில் படப்பிடிப்பு ஆரம்பிக்கலாம் என்று தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

**இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *