மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 பிப் 2022

பிக்பாஸ் அல்டிமேட்: வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் யார்?

பிக்பாஸ் அல்டிமேட்: வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் யார்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிலம்பரசனுடன் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக போட்டியாளர்களும் வர இருக்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் ஓடிடி வடிவமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் 24*7 என ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ’விக்ரம்’ படப்பிடிப்பு தேதிகள் ஒதுக்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். இப்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்க இருக்கிறார். வரும் ஞாயிறன்று சிலம்பரசன் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் ஆகியோர் வெளியேறி இருக்கும் நிலையில் தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக புதிய போட்டியாளர்களை உள்ளே அனுப்ப பிக்பாஸ் குழு திட்டமிட்டுள்ளது. சிலம்பரசனின் எண்ட்ரி ஞாயிறு வர இருக்கும் வேளையில் அதற்கு முன்பாகவே வைல்ட் கார்ட் எண்ட்ரி இருக்கும் என்கிறார்கள். அதில் விஜய் டிவி பிரபலமான ‘கலக்க போவது யாரு’ சதீஷ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி பெயர் அடிபடுகிறது. இதில் இரண்டு நபர்கள் உள்ளே போவார்களா அல்லது இருவரில் ஒருவர் உள்ளே போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மேலும், வைல்ட் கார்ட் எண்ட்ரி இருக்கிறது. மேலும் சிலம்பரசன் பிக்பாஸ் தொகுப்பாளாராக அறிமுகமாக இருக்கிறார் எனும்போது இந்த வாரம் எலிமினேஷன் இருக்குமா என்பது இந்த வார இறுதி எபிசோடில் தெரிய வரும்.

-ஆதிரா

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

சனி 26 பிப் 2022