மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 பிப் 2022

‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்’ ஆல்பம் ரிலீஸ்!

‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்’ ஆல்பம்  ரிலீஸ்!

முதலியார் பிரதர்ஸ் ஃப்லீம் தயாரிப்பில், உலகின் முன்னணி இசை நிறுவனமான மியூசிக் சோனி நிறுவனம் வழங்கும், நக்‌ஷா சரண் குரல் மற்றும் நடிப்பில், சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில், லியோ இசையில், கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்”.

நவீன தலைமுறையின் இணைய உலகின் பரபரப்பை அவர்களின் உலகை சொல்லும் டிரெண்டிங் பாடலாக உருவாகியுள்ள இந்த பாடல் வெளியீட்டு விழா நேற்று (பிப்ரவரி 24) சென்னையில் நடைபெற்றது

இவ்விழாவில் இயக்குநர் கார்த்திக் பேசுகையில், “இப்பாடல் முழுக்க முழுக்க சாண்டி மாஸ்டர் ஐடியா தான். அவர் ஐடியாவைதான் நான் எடுத்தேன், அவ்வளவு தான். உங்களுக்கு பாடல் பிடிக்குமென நம்புகிறேன்” என்றார்

இசையமைப்பாளர் லியோ பேசுகையில், “இந்த குழு என்னை அழைத்த போது, இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு எல்லோரும் பாடும்படியாக, எல்லோருக்கும் பிடிக்கும் படியான டியூனாக இந்த பாடல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். சாண்டி மாஸ்டர்,எம் த்ரீ முதலியார் பிரதர்ஸ் ப்லீம் ஆகியோரால் இப்பாடல் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளது. நக்‌ஷா இப்பாடல் மூலம் ராக்ஸ்டாராக மாறியுள்ளார். இன்னும் பெரிய அளவுக்கு செல்வார்” என்றார்

சாண்டி மாஸ்டர் பேசுகையில், “இங்கு வந்து வாழ்த்தும் அனைவருக்கும் நன்றி. ஆல்பம் பாடல் விழாவில், உண்மையில் டான்ஸ் மாஸ்டரை யாரும் விருந்தினராக அழைக்க மாட்டார்கள். ஆனால் என்னை இங்கு அழைத்த மது ஷாலினி மேடமுக்கு நன்றி. நக்‌ஷாவுக்கு சுத்தமாக டான்ஸ் வரவில்லை, உண்மைதான். ஆனால் அவர் பேஸிக்கிலிருந்து ஒரே மாதத்தில் கற்றுக்கொண்டு, இந்த அளவு ஆடியிருக்கிறார். முதலில் பாடல் பாடிய வாய்ஸ் யாருடையது என்பது எனக்கு தெரியாது ஆனால் நக்‌ஷா வாய்ஸ் தான் என தெரிந்து ஆச்சர்யப்பட்டேன். நக்‌ஷா கண்டிப்பாக பெரிய அளவு வெற்றி பெறுவார். இந்த பாடல் உங்களுக்கு பிடித்துள்ளது என நம்புகிறேன்” என்றார்

கிருத்திகா உதயநிதி பேசுகையில், ”நான் ஏற்கனவே இரண்டு ஆல்பம் பாடல் செய்துள்ளேன். எனக்கு அதில் உள்ள கஷ்டங்கள் தெரியும். இந்த பாடல் மிக துள்ளலாக இருந்தது. இயக்குநர் நன்றாக இயக்கியுள்ளார். சாண்டியின் முந்தைய போதை பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்” என்றார்

நடிகர் அரவிந்த் சாமி பேசுகையில், “குடும்ப நண்பராக தான் நான் வந்துள்ளேன். இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது எல்லோரும் மிக நன்றாக செய்துள்ளார்கள். அனைவரும் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்

பாடகர், நடிகை நக்‌ஷா பேசுகையில், “என் பெற்றோருக்கு தான் முதலில் நன்றி சொல்லி ஆரம்பிக்க வேண்டும் என் கனவை அவர்கள் நனவாக்கியுள்ளார்கள். இப்பாடலை வெளியிடுவதற்காக மியூசிக் சோனி நிறுவனத்திற்கு நன்றி. சாண்டி மாஸ்டர் நிறைய சொல்லி தந்தார், அண்ணா உங்கள் அன்புக்கு நன்றி. கார்த்திக் மிக அழகாக இப்பாடலை எடுத்துள்ளார். இங்கு வந்து என்னை வாழ்த்தி ஆதரவு தந்த கிருத்திகா உதயநிதி மேடம், அரவிந்த் சாமி சார், கமலா மேடமுக்கு நன்றி. உங்கள் எல்லோருக்கும் இப்பாடல் பிடிக்குமென நம்புகிறேன்” என்று கூறினார்.

இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வியாழன் 24 பிப் 2022