மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 பிப் 2022

நாளை இந்தியா - இலங்கை டி20: யார், யார் விளையாடுகிறார்கள்?

நாளை இந்தியா - இலங்கை டி20: யார், யார் விளையாடுகிறார்கள்?

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி லக்னோவில் பிப்ரவரி நாளை 24ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகள் தரம்சாலாவில் முறையே 26, 27ஆம் தேதியும் நடக்கின்றன.

இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில், விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்தும் விலகியதை அடுத்து, எதிர்பார்த்தபடி இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் ரோஹித் இனிமேல் மூன்று வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்துவார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பி இருப்பதுடன் டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இரு அணிகளில் இந்திய டி20 ஓவர் அணியில் விளையாடுபவர்கள்...

ரோஹித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா, ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அவேஷ் கான்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 18 பேர் கொண்ட அணியில் புதுமுக வீரராக சுழற்பந்து வீச்சாளர் ஆஷியன் டேனியல் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் 1-4 என்ற கணக்கில் தோல்வி கண்ட இலங்கை அணியில் இடம்பெற்று இருந்த பேட்ஸ்மேன் அவிஷ்கா பெர்னாண்டோ, வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷரா, சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். முழு உடல் தகுதியுடன் இல்லாததால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பனுகா ராஜபக்சே ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

இறுதியாக இலங்கை டி20 அணியில் விளையாடுபவர்கள்...

தசுன் ஷனகா (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் மென்டிஸ், அசலன்கா (துணை கேப்டன்), தினேஷ் சன்டிமால், தனுஷ்கா குணதிலகா, கமில் மிஷரா, ஜெனீத் லியானேஜ், வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, லஹிரு குமரா, பினுரா பெர்னாண்டோ, ஷிரன் பெர்னாண்டோ, மகேஷ் தீக்‌ஷனா, ஜெப்ரி வாண்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா, ஆஷியன் டேனியல்.

-ராஜ்

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

புதன் 23 பிப் 2022