மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 பிப் 2022

இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் கதையில் சரத்குமார்

இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் கதையில் சரத்குமார்

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குனர் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சரத்குமார் நடிப்பில் அவரது 150வது திரைப்படமாக உருவாகிறது தி ஸ்மைல் மேன்.

தமிழ் சினிமாவில் 100 படங்களை கடந்து முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்களில் ஒருவரான சரத்குமாரின் திரைவாழ்வில், அவரது 150 வது படமாக இப்படம் உருவாகிறது.

அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவல் அதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகும் முன், ஒரு சிக்கலான மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்.

முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் பாணி திரைக்கதையில் இப்படம் உருவாகவுள்ளது என்கின்றனர் படக்குழு வட்டாரத்தில்.

ஷ்யாம் - பிரவீன் கூட்டணியில் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா,ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

-அம்பலவாணன்

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

புதன் 23 பிப் 2022