மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 பிப் 2022

வலிமை டிக்கெட் விலை எவ்வளவு?

வலிமை டிக்கெட் விலை எவ்வளவு?

அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் 2,999 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் ‘வலிமை’ படத்துக்கான டிக்கெட் இலவசம் என மத்திய அரசின் தென்னிந்திய பன்மாநிலக் கூட்டுறவு அங்காடி மையம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது.

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட காகிதப் பட்டறை பகுதியில் SIMCO எனும் மத்திய அரசின் தென்னிந்திய பன்மாநிலக் கூட்டுறவு பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது.

தற்போது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த பல்பொருள் அங்காடியில் பொருள் வாங்குவோருக்கு நாளை வெளியாக இருக்கும் ‘வலிமை’ படத்துக்கான டிக்கெட் இலவசம் என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

அதில், 2,999 ரூபாய்க்கு மேல் மளிகைப் பொருள் வாங்குவோருக்கு காட்பாடி சில்க் மில்லில் உள்ள தனியார் திரையரங்கில் வெளியாகும் ‘வலிமை’ படத்துக்கான இலவச டிக்கெட் மற்றும் பாப்கார்ன், கூல்டிரிங்ஸ் அடங்கிய 500 ரூபாய் தொகுப்பு இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வலிமை படத்துக்கான டிக்கெட் திரையரங்குகளில் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

-இராமானுஜம்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

புதன் 23 பிப் 2022