மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 பிப் 2022

‘என் வாழ்வின் மிகப்பெரிய லட்சியம் இதுதான்’: சமந்தா

‘என் வாழ்வின் மிகப்பெரிய லட்சியம் இதுதான்’: சமந்தா

நடிகை சமந்தா தன் வாழ்வின் மிகப்பெரிய லட்சியம் என்ன என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஃபாலோயர்ஸ்ஸூடன் கேள்வி பதில் மூலம் கலந்துரையாடினார். பலரும் சமந்தாவிடம் அவரது வேலை தொடர்பாகவும், தனிப்பட்ட முறையில் வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட பல பிரச்சனைகள் குறித்தும், தற்போது அவருடைய மனநிலை எப்படி இருக்கிறது என்றும் பலர் கேட்டிருந்தனர். இதில் ஒருவர் ’உங்களுடைய வாழ்வின் மிகப்பெரிய லட்சியம் என்ன?’ என்ற கேள்வியை சமந்தாவிடம் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்திருந்த நடிகை சமந்தா, ‘சமந்தா என்ற ஒருவர் இருந்தார் என்பது பின்னாளில் பலருக்கும் நினைவிருக்க வேண்டும். அதுதான் என் வாழ்வின் லட்சியம்’ என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

அதேபோல, நம்பர் கேமில் நம்பிக்கை இருக்கிறதா என ஒருவர் கேட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்துள்ள நடிகை சமந்தா, ‘நம்பர் 1, நம்பர் 2 என சினிமாவில் இருக்கும் இந்த நம்பர் கேமில் எப்போதுமே எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. இந்த நம்பர் கேம்களை விடவும் என்னுடைய இடத்தை தக்க வைத்து கொள்வதில் மட்டுமே எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இது தவிர்த்து இந்த போட்டியில் நான் இல்லை’ எனவும் தெரிவித்து இருக்கிறார் சமந்தா.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை கைவசம் வைத்துள்ளார். தெலுங்கில் இவர் நாயகியாக நடிக்கும் ‘சகுந்தலம்’ படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. இது தவிர தெலுங்கில் ‘யசோதா’ மற்றும் ஹாலிவுட் படத்திலும் சமந்தா நடிக்க உள்ளார்.

ஆதிரா.

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

செவ்வாய் 22 பிப் 2022