மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 பிப் 2022

அடக்கம், ஆர்வம், அர்ப்பணிப்பு: அஜித்தை புகழும் போனி கபூர்

அடக்கம், ஆர்வம், அர்ப்பணிப்பு: அஜித்தை புகழும் போனி கபூர்

பிப்ரவரி 24 அன்று வெளியாக உள்ள வலிமை படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், வலிமை தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் அஜித் குமாரின் பிரமாண்ட தொடக்கமாக இருக்குமென தெரிவித்துள்ளார்.

படம் வெளியாக இன்னும் மூன்று தினங்களே இருக்கும் நிலையில் போனி கபூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,வலிமை திரைப்படத்தில் குடும்ப உறவுகளின் உணர்வுபூர்வமான தருணங்கள், சிறப்பான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் அஜித் குமார் மற்றும் பிற நடிகர்களின் அற்புதமான நடிப்பு என அனைத்து அம்சங்களும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.

அஜித் குமார் மிகவும் அடக்கமான நடிகர். ஒழுக்கம், தனது தொழிலின் மீது மிகுந்த ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய குணங்களில் அவர் தலைசிறந்தவர். தயாரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் அவர் என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. படத்தின் ஆரம்பக் கட்ட பணிகளின்போது நாங்கள் எதிர்பார்த்தபடி இந்தத் திரைப்படத்தை வடிவமைக்க அவர் பெரும் ஆதரவாக இருந்தார்.

வலிமை படத்தில் இயக்குநர் வினோத்தின் உழைப்பு அளப்பரியது. அவர் ஒரு பெர்பக்ஸனிஸ்ட். அவர் தனது நோக்கத்தை அடைய எந்த எல்லைக்கும் செல்வார். தயாரிப்பாளருடன் மிகுந்த நட்புடன் இருப்பார். இந்த கடினமான சவாலான தொற்றுநோய் காலகட்டத்தில் வலிமை படத்தை முடிக்க, ஒரு குடும்பத்தைப் போல எங்கள் ஒட்டுமொத்த குழுவினரும் இணைந்து உதவினர். அவர்களுக்கு நன்றி.

வலிமை படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பல முன்னணி தளங்கள் பெரும் தொகையுடன் போட்டியிட்டபோதிலும், வலிமை படத்தை ஒரு தயாரிப்பாளராக, ரசிகர்களின் கொண்டாட்டத்துக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட படம் என்கிற நம்பிக்கை எனக்குள் இருந்தது. நிச்சயமாக, ஓடிடி தளங்கள் திரைப்படங்களுக்கு ஒரு பரந்த சந்தையைத் திறந்துள்ளன. ஆனால், வலிமை போன்ற திரைப்படம் திரையரங்கு அனுபவத்துக்காகவே உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்கில் பார்த்துக் கொண்டாட வேண்டும் என்பதால் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடவில்லை என்று கூறியுள்ளார்.

-இராமானுஜம்

பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே பார்க்கின்றனர்: கே.எஸ்.ரவிக்குமார் ...

2 நிமிட வாசிப்பு

பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே பார்க்கின்றனர்: கே.எஸ்.ரவிக்குமார்

தனுஷின் தி கிரேமேன் ட்ரெய்லர்!

2 நிமிட வாசிப்பு

தனுஷின் தி கிரேமேன்  ட்ரெய்லர்!

முருகதாஸின் புதியபட அப்டேட்!

4 நிமிட வாசிப்பு

முருகதாஸின் புதியபட  அப்டேட்!

திங்கள் 21 பிப் 2022