மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 பிப் 2022

பிக்பாஸ்: கமல் இடத்தில் யார்?

பிக்பாஸ்: கமல் இடத்தில் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் ஓடிடி வடிவமான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் நேற்று மாலை அறிவித்தார்.

அதில், கொரோனா சூழல் காரணமாக விக்ரம் படப்பிடிப்பு மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பிக்பாஸ்ஸின் ஆறாவது சீசனில் சிறிய இடைவேளைக்கு பிறகு சந்திப்போம் என அந்த அறிக்கையில் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது கூட வீடியோ மூலமாக போட்டியாளர்களையும் மக்களையும் சந்தித்தேன். அப்படிப்பட்ட பிக்பாஸ் தற்போது டிஜிட்டல் வடிவமாக ஓடிடியில் கால் பதித்த போது அதை முன்னெடுத்து செல்லும் பெருமை எனக்கு கிடைத்தது. ஆனால், இப்போது 'விக்ரம்' படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதால் அதற்கான தேதிகளை நான் முழுமையாக ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். ஏனெனில் என்னால் மற்ற கலைஞர்களின் நேரத்தை தாமதிக்க செய்ய முடியாது. அதனால் கனத்த மனதுடன் பிக்பாஸ் ஓடிடியில் இருந்து விடைபெறுகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே கமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போது நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு வார இறுதி எபிசோட்டை தொகுத்து வழங்கினார்.

அவரே இனி பிக்பாஸ் அல்டிமேட்டையும் தொகுத்து வழங்குவாரா அல்லது வேறு நடிகர்கள் வருவார்களா என்பதை இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.

-ஆதிரா

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

3 நிமிட வாசிப்பு

ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்?

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

2 நிமிட வாசிப்பு

சமந்தா போன்று கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது டெஸ்ட்: 257 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

திங்கள் 21 பிப் 2022