மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 பிப் 2022

அட்லீயின் அரபிக்குத்து!

அட்லீயின் அரபிக்குத்து!

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘அரபிக் குத்து’ பாடல் அண்மையில் வெளியாகி இருந்தது. யூடியூப் தளத்தில் 6.6 கோடி பார்வைகளை இந்த பாடல் பெற்றுள்ளது. இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் இந்த பாடலுக்கு நடனமாடி, அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.

தொடர்ந்து நடிகை சமந்தாவும் அதையே செய்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் நடித்த ‘தெறி, மெர்சல், பிகில்’ ஆகிய படங்களை இயக்கிய அட்லீ இந்த ‘அரபிக் குத்து’ பாடலுக்கு தனது மனைவியுடன் இணைந்து நடனமாடி அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வீடியோ வெளியிட்ட இரண்டு மணி நேரத்தில் 98,232 பேர் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

-இராமானுஜம்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

திங்கள் 21 பிப் 2022