மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 பிப் 2022

ரோஹித் தலைமையிலான டெஸ்ட் அணியில் ரஹானே, புஜாரா நீக்கம்!

ரோஹித் தலைமையிலான டெஸ்ட் அணியில்  ரஹானே, புஜாரா நீக்கம்!

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டி, இரண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி வரும் பிப்ரவரி 24இல் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டி மார்ச் மாதம் 4இல் தொடங்க உள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தோடு விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவை பிசிசிஐ நேற்று (பிப்ரவரி 19) அறிவித்துள்ளது.

மேலும் ரோஹித் தலைமையிலான இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 18 பேர் கொண்ட டெஸ்ட் அணியும் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரஹானே மற்றும் புஜாரா இந்த டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் டி20 தொடரில் 2 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று (பிப்ரவரி 20) நடைபெறவுள்ளது. ஒருநாள், டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள்... 1.ரோஹித் சர்மா (கேப்டன்), 2. பும்ரா (துணை கேப்டன்), 3. மயங்க் அகர்வால் 4. பிரியங் பஞ்சல் 5. விராட் கோலி 6. ஷ்ரேயாஸ் அய்யர் 7. ஹனுமன் விஹாரி 8. சுப்மன் கில் 9. ரிஷ்ப் பண்ட் 10. அஸ்வின் 11. ஜடேஜா 12. ஜெய்ன்ட் யாதவ் 13. குல்தீப் யாதவ் 14. முகமது சமி 15. சிராஜ் 16. உமேஷ் யாதவ் 17. சவுரப் குமார் 18. கே.எஸ்.பரத்

-ராஜ்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

ஞாயிறு 20 பிப் 2022