மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 பிப் 2022

விற்பனையில் களைகட்டும் ‘புஷ்பா’ சேலை!

விற்பனையில் களைகட்டும் ‘புஷ்பா’ சேலை!

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘புஷ்பா’ படம் இந்திய அளவில் வசூலைக் குவித்துவரும் நிலையில், புஷ்பா சேலை என்ற பெயரில் குஜராத்தில் டிசைன் செய்யப்பட்ட சேலைகளும் இப்போது விற்பனையில் களைகட்டி வருகிறது.

தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. நடிகை ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சமந்தா நடனமாடிய பாடல் உள்ளிட்ட பலர் இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி வசூலை குவித்தது.

இந்த நிலையில் குஜராத்தைச் சேர்ந்த சரண்பால் சிங் என்பவர் புஷ்பா திரைப்படத்தின் புகைப்படங்களால் டிசைன் செய்யப்பட்ட சேலை ஒன்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தற்போது அந்த சேலை ‘புஷ்பா சேலை’ என்ற பெயரில் பிரபலமடைந்து வருகிறது.

முதலில் இந்த டிசைன் சேலையைத் தயாரித்த சரண்பால் தன்னுடைய சமூக வலைதளங்களில் அது குறித்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து பலரும் அவரிடம் அந்த டிசைன் சேலைக்கான ஆர்டர் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் ‘புஷ்பா சேலை’ வியாபாரம் களைகட்டியுள்ளது. இதுவரை 3000-க்கும் அதிகமான புஷ்பா சேலைகளைத் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக சரண்பால் கூறியுள்ளார்.

-ராஜ்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

ஞாயிறு 20 பிப் 2022