மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 பிப் 2022

ரஜினியுடன் படமா? போனி கபூர்

ரஜினியுடன் படமா? போனி கபூர்

இந்திய சினிமாவின் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான வலிமை வரும் வியாழன் அன்று வெளியாக உள்ளது.

ரஜினிகாந்த் 169 பட அறிவிப்புக்கு முன்பு சென்னை வந்திருந்த போனி கபூர், மும்பை செல்வதற்காக இரவு எட்டு மணிக்கு புறப்படும் நேரத்தில் 'சந்திக்க வேண்டும்' என்று ரஜினியிடம் இருந்து அழைப்பு வர போனி கபூர் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு சென்றார்.

அங்கு நள்ளிரவு வரை ரஜினிகாந்த் தான் அடுத்தடுத்து நடிக்க போகும் படங்கள் அதன் இயக்குநர்கள் பற்றி போனி கபூரிடம் கூறி அவரது ஆலோசனையை கேட்டுள்ளார். இளையராஜா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை பால்கி என்கிற பாலகிருஷ்ணன் இயக்குவது பற்றியும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. இது தான் உண்மை என்கிறது போனி கபூர் அலுவலக வட்டாரம்.

ஆனால் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக வழக்கம்போல் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது.

தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள 169ஆ வது திரைப்படத்திற்கான முதற்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் 170ஆவது படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளதாக நேற்று முதல் இணையதளங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

இந்நிலையில் அதனை அவசரமாக திட்டவட்டமாக மறுத்துள்ளார் போனி கபூர். அதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அதில் நானும் ரஜினிகாந்தும் நெடு நாள் நண்பர்கள். நானும் அவரும் அவ்வப்போது சந்திப்பதும் உண்டு. அந்த சந்திப்பின் போது எங்களது ஐடியாக்களை பகிர்ந்து கொள்வதும் உண்டு. ரஜினியுடன் நானும் இணைந்து பணியாற்றினால் அதனை நிச்சயம் முதல் ஆளாக நானே தெரிவிப்பேன். இது மாதிரியான தகவல்கள் ஏதும் கசியாது” என தெரிவித்துள்ளார்.

-இராமானுஜம்

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

3 நிமிட வாசிப்பு

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான  ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

திரையுலகினரை ஆச்சரியப்பட வைக்கும் 'கேஜிஎஃப் 2'!

3 நிமிட வாசிப்பு

திரையுலகினரை ஆச்சரியப்பட வைக்கும் 'கேஜிஎஃப் 2'!

மகள் பிறந்தநாள்: அர்ச்சனாவின் உருக்கமான பதிவு!

3 நிமிட வாசிப்பு

மகள் பிறந்தநாள்: அர்ச்சனாவின் உருக்கமான பதிவு!

ஞாயிறு 20 பிப் 2022