மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 பிப் 2022

உதயநிதியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

உதயநிதியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

உதயநிதி ஸ்டாலின் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து அவர் பரியேறும் பெருமாள்,கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்தப்படத்தில், உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விரைவில் முழுமையான அரசியல்வாதியாக மாற உள்ள உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் கடைசிப் படமாகவும் இது இருக்ககூடும் என்கின்றனர் சினிமா வட்டாரத்தில். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 4 ஆம்தேதி தொடங்கவிருக்கிறது.

சென்னையில் முதல்கட்டப் படப்பிடிப்பை நடத்தவும் எஞ்சிய படப்பிடிப்பை சேலம் பகுதியில் நடத்தி முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர், முழுமையான அரசியலுக்கு செல்லும் முன் நடிக்கும் படம் வலிமையான அரசியல் பேசுகிற படமாக இருக்க வேண்டும் என்பது உதயநிதி ஸ்டாலின் விருப்பமாக இருக்கிறது. அப்போதுதான் உதயநிதியின் எதிர்கால அரசியலுக்கு உதவிகரமாக இருக்குமென்றும் அவரது நலம் விரும்பிகள் கூறிவருகின்றனர்.

இந்தப்படத்தில் பங்குபெறும் எல்லோரும் முதல்நிலையில் இருப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தேடித்தேடி ஏ.ஆர்.ரகுமான், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

உதய நிதியின் கால்ஷீட் தேதிக்கு ஏற்ப கீர்த்தி சுரேஷின் தேதிகள் இல்லை என்று கூறியிருக்கிறார்கள். ஆனாலும் ஆளுங்கட்சி, அதிகார பலம் இருப்பதால் அழுத்தம் கொடுத்து கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.

இப்படத்தில் பேசப்படும் விசயங்கள் அடித்தட்டு மக்கள் வரை சென்று சேரவேண்டும் என்பதற்காகவே அவர் உட்பட பலரை வற்புறுத்தி ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள் திரைத்துறை வட்டாரத்தில்.

-இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வெள்ளி 18 பிப் 2022