மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 பிப் 2022

திருமணம் : மனம் திறந்த ராஷ்மிகா

திருமணம் : மனம் திறந்த ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தானா தனது காதல் மற்றும் திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் நடித்த ‘புஷ்பா’ படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களில் நடிகை ராஷ்மிகா பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது காதல் மற்றும் திருமண திட்டம் குறித்து தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஷ்மிகா மனம் திறந்துள்ளார்.

’காதல் என்பது என்னை பொருத்தவரை, இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பது. தனிப்பட்ட நேரம் ஒதுக்குவது மற்றும் அன்பை கொடுப்பதாகும். இருவரும் பாதுகாப்பாக உணர வேண்டும். ஆனால் இதெல்லாம் மட்டும் தான் காதல் என நாம் வரையறுக்க முடியாது. ஏனெனில் காதல் என்பது ஓர் உணர்வு. இருவருக்குள்ளும் அது இருக்கும் போது தான் சரியாக இருக்கும். ஒருவருக்கு மட்டும் இன்னொருவர் மீது காதல் வருவதால் எந்த பயனும் இல்லை’ என காதல் குறித்து ராஷ்மிகா கூறியுள்ளார்.

திருமணம் எப்போது என கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘திருமணம் குறித்து எந்த ஒரு கருத்துமே எனக்கு கிடையாது. அதை பற்றி பேசுவதற்கான வயதும் எனக்கில்லை. ஆனால், நான் ஏற்கனவே சொன்னது போல, இது நிச்சயம் ஒருவொருக்கொருவர் அந்த உறவில் நம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்’ என ராஷ்மிகா பகிர்ந்துள்ளார்.

பாலிவுட்டில் இவர் சித்தார் மல்ஹோத்ராவுடன் ‘மிஷன் மஞ்சு’ படம் மூலமாக அறிமுகமாக உள்ளார். அதே போல, இந்த படத்திற்கு பிறகு இவருக்கு இரண்டாவதாக ‘குட்பை’ படமும் கைவசம் உள்ளது. இதில் பாலிவுட் பாட்ஷா அமிதாப்புடன் இணைந்து நடிக்க இருக்கிறார் ராஷ்மிகா. இந்த படத்தை விகாஸ் பட் இயக்குகிறார்.

ஆதிரா

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வெள்ளி 18 பிப் 2022