மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 பிப் 2022

கார்த்திக் சுப்பராஜை பாராட்டிய அல்ஃபோன்ஸ் புத்திரன்

கார்த்திக் சுப்பராஜை பாராட்டிய அல்ஃபோன்ஸ் புத்திரன்

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘மகான்’ படத்தை பார்த்து விட்டு அல்ஃபோன்ஸ் புத்திரன் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம், சிம்ரன், பாபிசிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘மகான்’. அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக இந்த படம் கடந்த 10ம் தேதி வெளியானது. படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ,படத்திற்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து படக்குழு சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டிருந்தது.

மேலும் படத்தை பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்ததாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். தற்போது ‘நேரம்’, ‘பிரேமம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் ‘மகான்’ படம் பார்த்து விட்டு தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்," ’மகான்’ மிகவும் அருமையாக எடுக்கப்பட்ட திரைப்படம். விக்ரமின் நடிப்பு அருமை. ‘அந்நியன்’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரமின் நடிப்பு திறனை மிக அருமையாக பயன்படுத்தி கொண்ட திரைப்படம் ‘மகான்’. இதற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜூக்கு நன்றி. அதேபோல, பாபி சிம்ஹாவும் ‘ஜிகர்தண்டா’வின் அசால்ட் சேது கதாப்பாத்திரத்தை மிஞ்சும் அளவுக்கு சிறப்பான நடிப்பை ‘மகான்’ திரைப்படத்தில் கொடுத்துள்ளார். துருவ் விக்ரமும், சதானத்தும் சிறப்பாக நடித்துள்ளனர்” என தனது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்.

‘மகான்’ திரைப்படத்திற்கு பிறகு, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இணைந்து பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிரா.

தியேட்டர் பாணியில் ஓடிடி!

5 நிமிட வாசிப்பு

தியேட்டர் பாணியில் ஓடிடி!

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

3 நிமிட வாசிப்பு

ரஜினி பட ஹீரோயின்கள்: சர்ச்சையான  ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு!

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

3 நிமிட வாசிப்பு

பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் தலைமறைவு!

வெள்ளி 18 பிப் 2022