மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 பிப் 2022

சோட்டாணிக்கரையில் காதலருடன் நயன்

சோட்டாணிக்கரையில் காதலருடன்  நயன்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் கேரளாவில் உள்ள சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

மதங்களை கடந்து தங்கள் வேண்டுதல்கள், விருப்பங்கள் நிறைவேற சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் வேண்டுதல் செய்வதும், அது நடந்துவிட்டால் அதற்கான காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது. பிறப்பால் கிறிஸ்தவரான நயன்தாராவும், இந்து மதத்தவரான விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் இணைந்து சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு சென்ற புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது..

நடிகை நயன்தாரா கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது ஏற்பட்ட காதல் காரணமாக இருவரும் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தற்போது வரை இந்த உறவு நீடித்து வருகிறது. விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என கூறப்படுகிறது

2022-ம் ஆண்டு இவர்களது திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை நயன்தாரா, காதலனுடன் அடிக்கடி வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருப்பவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால், வெளிநாட்டு பயணங்களை இவர்களால் மேற்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் கேரளாவில் உள்ள சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இருவரது புகைப்படங்களையும் பகிரும் அவரது ரசிகர்கள், பகவதி அம்மன் கோயிலில் மூக்குத்தி அம்மன் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-இராமானுஜம்

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி படத்தில் நடிக்கிறேனா?- ராஜூ விளக்கம்!

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

5 நிமிட வாசிப்பு

ரஜினி வாழ்க்கையை மாற்றிய துரியோதனன் வேடம்!

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நான் பார்த்த முதல் ரஜினி படம்: அனிருத் நெகிழ்ச்சி!

வெள்ளி 18 பிப் 2022