மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 பிப் 2022

இந்தோனேஷிய மொழியில் முதல் தமிழ் படம்!

இந்தோனேஷிய மொழியில் முதல் தமிழ் படம்!

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் தமிழில் வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 இந்தோனேஷிய பஹாஸா மொழியில் உருவாகும் முதல் தமிழ் படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கவிஞர் எனப் பன்முக ஆளுமையான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் எது செய்தாலும் அது மற்றவர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பதில் தீவிரமாகச் செயல்படக்கூடியவர்.

தமிழ்த் திரைப்படங்களின் காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் எண்ணிக்கை கூட்டம் கூட்டமாக இருக்கும். இதில் இருந்து வித்தியாசமாக ஒருவர் மட்டும் படம் முழுவதும் நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தை நடித்து இயக்கி தயாரித்திருந்தார். இந்தப் படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது.

இந்திய மற்றும் உலகளாவிய சினிமா பார்வையாளர்களின் கவனத்துக்கு இந்தப் படம் உள்ளானது முதல் அகாடமி விருதுகள் மற்றும் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் நடுவர்களின் கவனத்தை ஈர்த்தது வரை பல சாதனைகள் படைத்த 'ஒத்த செருப்பு சைஸ் 7’ அதிகாரபூர்வமாக இந்தோனேசிய பஹாஸா மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது.

இதை ஃபால்கன் நவீன் தயாரிக்கிறார். இந்தோனேஷியாவில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ்த் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், அமிதாப் பச்சன் தயாரிப்பில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பை தற்போது முடித்துள்ளார்.

-இராமானுஜம்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வெள்ளி 18 பிப் 2022